நான்கு கதாநாயகிகள் நடிக்கும் பேய்க்கதை – கருங்காப்பியம் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
காஜல் அகர்வால் உள்ளிட்ட நான்கு நாயகிகள் நடிக்கும் கருங்காப்பியம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
யாமிருக்க பயமே, காட்டேரி மற்றும் கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் டிகே. இவர் படங்களில் எப்போதும் 18+ விஷயங்கள் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இவர் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி மற்றும் ஷெர்லின் ஆகிய நடிகைகள் நடிக்கும் கருங்காப்பியம் என்ற பேய் படம் உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.