திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (10:35 IST)

அசோக் செல்வன் நடித்துள்ள சில நேரங்களில் சில மனிதர்கள் டீசர் வெளியீடு!

ஓ மை கடவுளே படத்துக்கு பின்னர் அசோக் செல்வனுக்கு வாய்ப்புகள் அதிகளவில் வந்து குவிய ஆரம்பித்துள்ளன.

ஓ மை கடவுளே படத்தின் வெற்றி அசோக் செல்வனுக்கு இப்போது அதிகளவில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. முன்னணி இயக்குனரான வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அது தவிர 5 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் முதல் லுக் வீடியோ வெளியாகியுள்ளது. அதை வெளியிட்ட கமல்ஹாசன் ‘AR Entertainment தயாரிப்பில்,Trident Arts வழங்கும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எனும் புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.