வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (16:33 IST)

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

தேசிய பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேசிய பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் பதவி உயர்வு சம்பள உயர்வு முறைகளில் ஈடுபட்டதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம்சாட்டப்பட்டது
 
 இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தனர்
 
இந்த நிலையில் தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை ஏழு நாட்கள் காவலில் எடுக்க சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது