புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:47 IST)

வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களை காவல்துறை மிரட்டுகிறது: ஓபிஎஸ்

வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் காவல்துறையினர் மிரட்டுகிறது என ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 
 
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியானதில் இருந்தே பிற கட்சிகள் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் திமுகவில் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக அதிமுக வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து உள்ளனர் இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் காவல்துறையினர் திமுகவில் சேருமாறு மிரட்டுகின்றனர் என்றும் இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது