திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (18:09 IST)

16 வயது சிறுமியை ஏமற்றி திருமணம் செய்த 65 வயது ஷேக்!

16 வயது சிறுமியை ஏமற்றி திருமணம் செய்த 65 வயது ஷேக்!

65 வயதான ஷேக் ஒருவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 16 வயதான சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாய் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் 16 வயதான எனது மகளை ஓமனை சேர்ந்த 65 வயதான ஷேக் அகமது என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துள்ளார்.
 
இந்த திருமணத்துக்கு எனது கணவர் சையதா உன்னிசா மற்றும்க் அவரது சகோதரி கவுசியா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். ரம்ஜானிற்கு முன்னர் ஐதராபாத்துக்கு வந்த ஷேக் எனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டார். அதற்கு எனது மகள் மறுத்துவிட்டார்.
 
ஆனால் அவர் ஓமனில் சொகுசாக வாழலாம் என கூறி ஆசை வார்த்தைகள் கூறி சில வீடியோக்களை எனது மகளிடம் காட்டி அவளை ஏமாற்றியுள்ளார். ஐதராபாத் அருகே பர்காசில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமண ஏற்பாடுகளை செய்து, 5 லட்சம் ரூபாய் கொடுத்து எனது மகளை வாங்கியுள்ளார்.
 
திருமணம் முடிந்த பின்னர் எனது மகளை ஓமனுக்கு கொண்டு சென்றுள்ளார். எனது மகளை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டால் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என கூறுகிறார். எனவே எனது மகளை எனக்கு மீட்டுத்தாருங்கள் என கூறியுள்ளார் சிறுமியின் தாய்.