செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (12:53 IST)

என் மகன் ஒரு அப்பாவி - திலீப்பின் தாயார் உருக்கம்

மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப் எந்த குற்றமும் செய்யாதவர் என அவரின் தாய் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜாமீன் கேட்டு அவர் விண்ணப்பித்த மனுவையும் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது. எனவே, தற்போது அவர் கேரளாவில் உள்ள ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், திலீப்பின் தாயார் சரோஜம் கடந்த 11ம் தேதி சிறைக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அவருடன் திலீப்பின் சகோதரரும் சென்றார். திலீப் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போதுதான் முதல் முறையாக அவரின் தாய் சிறைக்கு சென்று பார்த்துள்ளார்.
 
இந்நிலையில் சரோஜம் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில் “ எனது மகன் திலீப் எந்த தவறும் செய்யாதவன். நடிகை கடத்தல் வழக்குக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை பிடிக்காத சிலர் சதித்திட்டம் தீட்டி அவரை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டனர். எனவே, நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, எனது மகனுக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த கடிதத்தை பினராய் விஜயன், கேரள மாநில டி.ஜி.பி-க்கு அனுப்பி வைத்துள்ளார்.