1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (15:19 IST)

16வயது இந்திய சிறுமியை மணமுடித்த 65வயது ஓமன் ஷேக்

ஓமனைச் சேர்ந்த ஷேக் அஹமது(65) 16 வயது இந்திய சிறுமியை மணமுடித்த சம்ப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்த சையதா உன்னிசா, ஓமனைச் சேர்ந்த ஷேக் திருமணம் செய்துக்கொண்ட தனது மகளை மீட்டுத் தருமாறு பலகுனுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது கணவர் சிகந்தர் மற்றும் கணவரின் சகோதரி கவுசியா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
 
ஹைதராபாத் அருகே பர்காசில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிகந்தர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். ஷேக் அஹமது அந்த சிறுமியை சிகந்தரிடம் ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உன்னிசா தனது மகளை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டதற்கு கொடுத்த பணத்தை கேட்டுள்ளனர். பணத்தை தருமாறு சிகந்தரிடம் உன்னிசா பலமுறை கேட்டுள்ளார். மகளை மீட்க சிகந்தர் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் தன்னை மிரட்டுவதாக உன்னிசா கூறியுள்ளார்.