1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (15:38 IST)

செல்பி எடுக்க வந்த ரசிகரை பளார் என அறைந்த நடிகர்..(வீடியோ)

தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரை பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கன்னத்தில் அறைந்த விவகாரம் அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 

 
நடிகர் பாலகிருஷ்ணா எதையாவது செய்து அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்று. சமீபத்தில் கூட இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பில்  தனது காலணியை கழட்டாத தனது உதவியாளரை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில், தற்போது அதுபோன்ற ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். ஆந்திராவில் நந்தியால் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, ஒரு ரசிகர் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் அவர் மீது சாய்ந்தார். இதனால், கோபமடைந்த பாலகிருஷ்ணா, அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
 
இதனால் அவருக்காக அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.