செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (16:38 IST)

ஊருக்குள் புகுந்து ஆட்டம்போட்ட சிங்கங்கள்; அச்சத்தில் மக்கள்

குஜராத் மாநிலம் கீர் சரணாலயத்திலிருந்து தப்பித்த 12 சிங்கங்கள் ஊருக்குள் சுற்றி திரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் அதிக அளவில் ஆசிய சிங்கங்கள் உள்ள கீர் சரணாலயம் உள்ளது. சரணாலயத்தில் இருந்து தப்பித்த 12 சிங்கங்கள் அருகில் உள்ள ராம்பாரா கிராமத்தில் சுற்றி திரிந்துள்ளன.
 
இரவு நேரத்தில் சாலையில் சிங்கங்கள் சுற்றி திரிந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை நடைப்பெற்றுள்ளது. இத்குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 
ராம்பாரா கிராமம்  சரணாலயத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அவை இரை தேடி கிராமத்திற்குள் புகுந்திருக்கும். ஆனால் அவை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் சென்றுவிட்டன என்றனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

சிசிடிவி கேமராவில் சிங்கங்கள் ஓடுவது, விளையாடுவது ஆகியவை அனைத்தும் பதிவாகியுள்ளது.