1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (11:47 IST)

சென்னையில் கோலம் போட்ட 6 மாணவிகள் கைது!

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்களை மாணவிகள் தங்கள் வீட்டின் முன் போட்டனர். இதனை அடுத்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்ட 6 மாணவிகளை போலீசார் கைது செய்தனர்
 
மாணவிகள் போட்ட கோலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து Against CAA, Against NPR போன்ற வாசகங்களை எழுதியதாகவும் இதனையடுத்து அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
6 மாணவிகள் கைது செய்யப்பட்ட போது அங்குள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டதால் கைது செய்யப்பட்ட 6 மாணவிகள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது