ஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவுநாள் - தலைவர்கள் அஞ்சலி
ஜவஹர்லால் நேருவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டித் ஜவஹர்லால் நேரு. 1889 ஆம் ஆண்டு 14 நவம்பர் அன்று பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ந் தேதி இயற்கை எய்தினார்.
இந்நிலையில் டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.