புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (17:51 IST)

தூத்துகுடி துப்பாக்கி சம்பவம்: எல்லா தலைவர்களும் எஸ்கேப் ஆனது எப்படி?

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்தன. தமிழக அரசும் இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. 
 
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தூத்துகுடிக்கு நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து அந்த பகுதி மக்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று போராட்டத்தின் 100வது நாள் என்பதால் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக போராட்டக்காரர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். எனவே இன்றைய போராட்ட சம்பவம் திடீரென நடந்த போராட்டம் அல்ல. இன்று போராட்டத்தின் 100வது நாள், முக்கியமான நாள் என்று தெரிந்தும் தூத்துகுடி பக்கம் ஒரு அரசியல் தலைவர் கூட போகாத மர்மம் என்னவென்றுதான் புரியவில்லை. 
 
மிகச்சரியாக இன்று அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் லட்டர்பேட் கட்சி தலைவர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு தூத்துகுடி போராட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர். இன்று கலவரம் வெடிக்கும் என்று தெரிந்தே எஸ்கேப் ஆனார்களா? அல்லது தற்செயலாக அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்களா? என்பது அவரவர் மனச்சாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மை
 
இதுவரை தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கலவரமோ வன்முறையோ வெடித்தபோது அரசியல் கட்சி தலைவர்கள் எஸ்கேப் ஆகிவிடுவதும், அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது என்பதே சோகம்.