திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (07:40 IST)

நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள்: கூடுதலாக 8,195 இடங்கள் கிடைக்கும்..!

college students
நாடு முழுவதும் 50 புதிய தனியார் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து 8,195 புதிய மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாடு முழுவதும் 50 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 12 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அடுத்து 8,195 மருத்துவ இடங்கள் புதிதாக கிடைக்கும் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் 8,195 மருத்துவர்கள் கூடுதலாக படித்து முடித்து வெளியே வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva