திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (11:25 IST)

பொறியியல் படிப்பு: விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கீடு..!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ரேண்டமில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் வருகிற 20ஆம் தேதி தொடங்குகிறது என்றும்,  தரவரிசைப்பட்டியல் வரும் 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மாணவர்கள் தங்கள் ரேண்டம் எண்களை www.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 1.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால் அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இருக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran