திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (15:00 IST)

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி கூறிய முக்கிய தகவல்..!

Ponmudi
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது என்றும், அதற்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘சென்ற ஆண்டை விட இந்தாண்டு 18,510 பேர் அதிகம் விண்ணப்பித்து உள்ளனர் என்றும், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது என்ரும் கூறினார்,
 
மேலும் பொறியியல் கல்லூரிகளில் தொழிற்சாலைகளோடு தொடர்பு கொண்டு கட்டமைப்பை மாற்றியுள்ளோம் என்றும்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் கட்ஆஃப் மதிப்பெண் ஒரே மாதிரியாக இருந்தால் முதலில் கணித பாடத்தின் மதிப்பெண் இரண்டாவதாக இயற்பியல் மதிப்பெண், மூன்றாவதாக விருப்பப் பாடத்தின் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். இந்த 3 பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால் பிளஸ் 2 மொத்த மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran