தொடர்புடைய செய்திகள்
- காங். இருந்து நீக்கப்பட்ட முக்கிய புள்ளி - அரசியல் பரபரப்பு!
- கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு
- தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள் - தற்காப்பு என்ன?
- தக்காளியால் தக்காளி வைரஸ் பாதிப்பில்லை! – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
- கேரளாவில் தக்காளி காய்ச்சலால் பீதி - குழந்தைகளுக்கு அதிக ஆபத்தா?
கேரளவில் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!
கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக அசானி புயல் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இதே போல கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரளா மாவட்டங்களான கோழிக்கோடு மற்றும் கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைத் தவிர, மற்ற ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று கேரளா வந்துள்ளனர்.
