செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மே 2022 (10:49 IST)

தக்காளியால் தக்காளி வைரஸ் பாதிப்பில்லை! – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

Radhakrishnan
கேரளாவில் தக்காளி வைரஸ் பரவி வரும் நிலையில் அதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவில் தக்காளி வைரஸ் என்ற புதிய வைரஸ் பரவியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் “தக்காளி வைரஸ் என்பது புதிய வைரஸ் அல்ல. சிக்கன்குனியா போன்று கொசுவால் உருவாகும் கிருமிகள் இது. இதனால் கன்னத்தில் சிகப்பாக தழும்புகள் வருவதால் தக்காளி வைரஸ் என்று அழைக்கிறார்கள். இதற்கும் தக்காளி பழத்திற்கும் தொடர்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.