1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 8 மே 2022 (13:04 IST)

கேரளாவில் தக்காளி காய்ச்சலால் பீதி - குழந்தைகளுக்கு அதிக ஆபத்தா?

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனும் புது வகை வைரஸாக் ஏற்படக்கூடிய தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கேரளா மாநிலத்தில் 5 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல், உடல் வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஆம், கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சல், உடல் வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் மட்டுமின்றி தோலில் சிவப்பு நிற திட்டுக்கள் ஏற்பட்டு எரிச்சல், வலியை தருகிறதாம் இந்த தக்காளி காய்ச்சல். 
 
இந்த காய்ச்சல் கொசுக்கடியால் பரவும் சிக்கன்குன்யாவின் பின்விளைவாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். தக்காளி காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.