திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (20:37 IST)

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி

இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது
விரைவில் நடைபெறவுள்ள 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் பிரபல தொழிலதிபர் அதானியின் குழுமமும் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை சார்பில் சமீபத்தில்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இதில்,ஜியோ, வோடபோன்,  ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற  நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்ப விண்ணப்பித்துள்ளன.

இந்த நிலையில், இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க இந்தியாவின் டாப் பணக்காரராக உள்ள அதானி விண்ணப்பித்துள்ளதாக த்கவல் வெளியாகிறது..