வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எப்போது?

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எப்போது?
இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு தற்போது தகவல் தற்போது வெளியாகி உள்ளது 
 
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏல பரிந்துரை மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் வழங்க உள்ளதாகவும் அனேகமாக மார்ச் மாதத்தில் பரிந்துரையின் அடிப்படையில் ஏலம் நடைபெறும் என்றும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
4ஜி சேவையை விட பத்து மடங்கு அதிகமான டவுன்லோட் வேகத்தை 5ஜி சேவை கொண்டிருக்கும் என்றும் இந்த ஆண்டிலேயே ஏலம் நடைபெறுவது உறுதி என்று ஏற்கனவே நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிட்டால் ஒரு சில நொடிகளில் ஒரு முழு திரைப்படத்தை டவுன்லோட் செய்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது