1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 41 canada embassy officers quit from india today

மத்திய அரசு உத்தரவு.. இந்தியாவில் இருந்து இன்று வெளியேறும் கனடா தூதரக அதிகாரிகள்..!

Canada Visa
மத்திய அரசின் அதிரடி உத்தரவால் இன்று  41 கனடா தூதரக அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும்  இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் கனடா நாட்டை சேர்ந்த 21 தூதரக அதிகாரிகளை தவிர மற்றவர்கள்  வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இன்று 41 கனடா தூதரக அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும்  இந்தியாவிலிருந்து வெளியேறுகின்றனர் 
 
தற்போதைய சூழல் கனடாவை சேர்ந்த 21 பேருக்கு மட்டுமே தூதரக அதிகாரி அந்தஸ்தை  இந்தியா வழங்கியுள்ளதால் அவர்களை தவிர அனைவரும் இன்று இந்தியாவில் இருந்து வெளியேறுகின்றனர். 
 
இந்தியாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளின் தூதரக சேவையை பாதிக்கும் என  கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறினாலும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அரபிக்கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு..!