வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (20:38 IST)

2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தமா? மத்திய இணை அமைச்சர் தகவல்

2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் ஏடிஎம்களில் இனி 2000 நோட்டு கிடைக்காது என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அரசுக்கு சொந்தமான எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கி ஏடிஎம்களில் 500 மற்றும் ரூபாய் 200 நோட்டுக்களுக்கான மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பண மோசடிகள் பெருமளவு பெருகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் இருந்து நீக்கப் போவதாக செய்திகள் பரவின. மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு அளவை குறைத்துக் கொண்டதாக ரிசர்வ் வங்கியும் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில ஆண்டுகளாக பாமரர் வரை பரவியிருந்த 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது பார்ப்பது அரிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ’2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணியை நிறுத்துவதற்கு தற்போது திட்டம் எதுவும் இல்லை என்றும் மக்களிடையே சில்லரை தட்டுப்பாடு இருப்பதால்தான் 2000 ரூபாய் நோட்டுக்கள் பதிலாக 500 மற்றும் 200 நோட்டுகள் அதிக அளவில் ஏடிஎம்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்