செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (16:50 IST)

பிரபல நடிகர் சென்ற உடற்பயிற்சி கூடத்திற்கு சீல் ! மாநகராட்சி நடவடிக்கை !

பிரபல நடிகர் சென்ற உடற்பயிற்சி கூடத்திற்கு சீல் ! மாநகராட்சி நடவடிக்கை !

கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சாஹித் கபூர் சென்ற உடற்பயிற்சிக் கூடத்துக்கு மும்மை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
 
கடந்த 13ஆம் தேதி இரவு , மஹாராஷ்டிர அரசு, மும்பை  உள்பட 6 நகரங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள்,நீச்சல் குளம், தியேட்டர்கள் பூங்காக்களை மூட உத்தரவிட்டிருந்தது.
 
அன்று, ஹிந்தி நடிகர் ஷாகித் கபூர் மற்றும் மனைவியுடன் பாந்திரா பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடும் செய்திகள் வெளியாகின. 
 
இதனையடுத்து,நடிகர் ஷாகித் கபூர் சென்ற உடற்பயிற்si கூடத்துக்கு மும்பை மாநகராட்சிகள் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.