திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (17:53 IST)

ஜம்முவில் 2 பேருந்துகள் மோதி விபத்து: சிறுமி உள்ளிட்ட 3 பேர் பலி

jammu accident
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஜம்முவில் இருந்து கத்துவர் மற்றும் ஹரித்வார் ஆகிய பகுதிகளுக்கு இரண்டு பேருந்துகள் பயணிகளும் சென்று கொண்டிருக்கும் போது, பதான்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இந்த இரண்டு பேருந்துகளும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்தின் பின்பகுதி கடும் சேதமடைந்திருப்பதாகவும்,  ஒரு சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்தக் கொடூர விபத்தில்,   காயமடைந்துள்ள 17 பேரை மீட்டு  அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதில், 7 பேர்  நிலைமை மோசமாக உள்ளதாகத்  தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj