திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (16:45 IST)

10 நாட்களில் புதிய அரசியல் கட்சி: குலாம் நபி ஆசாத் அறிவிப்பு!

Gulam
இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் அவர்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் குலாம் நபி ஆசாத் பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய குலாம் நபி ஆசாத் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் 
 
அப்போது அவர், இன்னும் பத்து நாட்களில் புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த தகவல்களையும் விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார் 
 
குலாம்நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கயிருப்பது ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.