ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகள் திறப்பு: மக்கள் மகிழ்ச்சி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் மீண்டும் திரையரங்குகளை திறக்க ஜம்மு-காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுத்த நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திறந்து வைக்கப்பட்டன. இந்த திரையரங்குகளை ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார்.
30 ஆண்டுகளுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருவதாக ஒரு குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டரில் படத்தை கண்டு களித்து தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது என்றும் அரசு கூறியுள்ளது.