மீண்டும் பாராளுமன்றம் செல்லும் 197 சிட்டிங் எம்.பி.கள் !

Last Modified சனி, 25 மே 2019 (08:48 IST)
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களில் 197 பேர் கடந்த ஆண்டும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளவர்களில் 197 பேர் சிட்டிங் எம்.பி. கள் எனத் தெரியவந்துள்ளது. பாஜகவில் மட்டும் 145 சிட்டிங் எம்.பி.கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் 12 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக சார்பில் 7 பேர் மீண்டும் களமிறக்கப்படார்கள். ஆனால் அதிர் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :