செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (21:36 IST)

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஷால்! ஏன் தெரியுமா?

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட முழுமையான வெற்றியை பெற்றுள்ளது. தேனி தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 தொகுதிகளையும் சுளையாக அள்ளியுள்ளது. மேலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அடுத்து தேசிய அளவில் மூன்றாவது எண்ணிக்கையில் அதிக எம்பிக்கள் உள்ள கட்சியாக திமுக உருவாகியுள்ளது.
 
இந்த நிலையில் திமுகவின் வெற்றிக்கு பிரபல அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சங்க செயலாளர் விஷால் இன்று முக ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சில நிமிடங்கள் பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
விஷால் வகித்து வந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை தமிழக அரசு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து டம்மியாக்கியுள்ள நிலையில் முக ஸ்டாலினை விஷால் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது