1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (21:07 IST)

13 வயது மனநிலை பாதித்த சிறுமிக்கு 10 பேர் சேர்ந்து பாலியல் கொடுமை: மூடி மறைக்க பார்த்த பஞ்சாயத்து!

மேகாலயாவில் உள்ள வடக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் 13 வயது மநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை 10 பேர் இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த பேரில் 8 பேர் திருமணமானவர்கள், 2 பேர் மைனர் ஆவர். இந்த சம்பவத்தை 8 பேரில் ஒருவரது மனைவி பார்த்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீஸார் விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர். 
 
ஆனால், போலீஸ் நடவடிக்கைக்கு முன்னர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அங்கு சிறுமியின் குடும்பத்தாரிடம் சமாதானம் பேசப்பட்டது. இந்த விவகாரத்தை மூடி மறைக்க பஞ்சாயத்து திட்டமிட்டுள்ளது. ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் இதற்கு உடன்படவில்லை. பின்னர்தான் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.