செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (07:27 IST)

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் விட்டுவைக்காத அயோக்கியர்கள்

மதுரையில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போல் செய்யும் காமுகர்களுக்கு கொடூர தண்டனை வழங்கினால் ஒழிய இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் போகும்.
 
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் பின்புறத்தில் பெண் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் தெரியவந்தது. அந்த பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விருமாண்டி என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.