வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 ஜூலை 2018 (20:38 IST)

12 வயது சிறுமி பாலியல் கொடுமை: மேலும் ஆறு பேர் கைது

சென்னை அயனாவரத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் 24 பேர்களால் கூட்டு பலாத்காரம் செய்த நிலையில் இவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டு அவரகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் இதே கொடுமையை செய்த மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
எனவே கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 பேர்களிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன
 
முதலில் 17 பேர் கைது செய்யப்பட்டவுடன் அதே அபார்ட்மெண்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஏழு பேர் தலைமறைவாகியதாகவும், ஆனால் சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ பதிவின் உதவியால் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.