1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (14:47 IST)

அதிமுகவின் ஒரு தொண்டரை கூட ஸ்டாலினால் தொட முடியாது! – எடப்பாடியார் பதிலடி!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினால் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இரண்டாக உடைய போவதாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி “நாட்டுக்காக உழைத்த நல்லவர்களால் உருவாக்கப்பட்டது அதிமுக. அதை ஸ்டாலின் உடைக்க பார்க்கிறார். அதிமுக உடைந்துவிடும் என அவர் கனவு காண்கிறார். ஆனால் அவரால் அதிமுகவை உடைக்க முடியாது. அதிமுகவின் தொண்டர் ஒருவரை கூட ஸ்டாலினால் தொட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.