திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (15:40 IST)

’’தியேட்டர்கள் திறங்க...’’ விஜய்யின் மக்கள் இயக்கம் முதல்வருக்கு கடிதம் !

நடிகர் விஜய் மற்றும்  விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. அதேசமயம் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று நடிகர் தனுஷ் மீண்டு தியேட்டர் கலாச்சாரம் தொடங்கவே விஜய் சாரின் மாஸ்டர் படத்தை தியேட்டரில் பாருங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மாஸ்டர் படம் வெளியாகவுள்ளதால் கேரளாவில் தியேட்டர்களிஅ திறக்க வேண்டுமென வலியுறுத்தி அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.