வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 30 டிசம்பர் 2020 (17:31 IST)

விக்ரம் பிரபு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் ரிலீஸ் !!!

விக்ரம் பிரபு முத்தையா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பெயர் பேச்சி என வைக்கப்பட்டு இருந்த நிலையில் இப்படத்தின் பெயர் புலிக்குத்தி பாண்டி எனப் பெயர் வைத்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் அவர் இப்போது அவர் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் சன் நெக்ஸ்ட் தளம் மற்றும் சன் டிவியில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பொங்கலுக்கு நேரடியாக வெளியிடலாம் என முடிவு செய்திருந்தது. இந்த படத்துக்கு முதலில் பேச்சி எனப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதை இப்போது மாற்றியுள்ளது படக்குழு.
இந்நிலையில் இப்படத்த்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது,. இதனால் நீண்ட நாட்களாக விக்ரம் பிரபுவிம் படம் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.