1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:49 IST)

ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தின் 100வது நாள்: காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு!

rahul priyanka
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் என்பதும் இந்த பயணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த ஒற்றுமை பயணம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரம் வழியாக காஷ்மீர் வரை செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தை நூறாவது நாள் நாளை கொண்டாட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. டிசம்பர் 16ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னணி பாடகர்கள் இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
 
Edited by Siva