வியாழன், 1 டிசம்பர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: வியாழன், 24 நவம்பர் 2022 (09:51 IST)

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பிரியங்கா காந்தி: வைரல் புகைப்படங்கள்!

rahul priyanka
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பிரியங்கா காந்தி: வைரல் புகைப்படங்கள்!
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திடீரென அவரது சகோதரி பிரியங்கா காந்தி இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் என்பதும் இந்த பயணம் காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த ஒற்றுமை பயணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி கலந்து கொண்ட நிலையில் தற்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தி தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார் 
 
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடைபயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது ராகுல் காந்தியின்  நடைபயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த பயணம் காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva