வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (14:46 IST)

என்னா மனுஷன்யா..! பாஜக அலுவலகம் நோக்கி ஃப்ளையிங் கிஸ் கொடுத்த ராகுல்காந்தி!

rahul gandhi
தேசிய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கும் ராகுல் காந்தி பாஜக அலுவலகத்தில் இருந்த மக்களை நோக்கி கை அசைத்த வீடியோ வைரலாகியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை யாத்திரை என்னும் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி குமரியிலிருந்து நடந்து சென்று கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களை நடந்தே கடந்துள்ள ராகுல்காந்தி தற்போது ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ஜாலவார் நகரத்தின் சாலை வழியாக இன்று ராகுல்காந்தி சென்றார்.

அப்போது ராகுல்காந்தியை காண பாஜக கட்சி அலுவலகம் ஒன்றின் மீது ஏராளமான மக்கள் நின்றனர். அவர்களை பார்த்து கையசைத்த ராகுல் காந்தி சில ஃப்ளையிங் கிஸ்களையும் பறக்க விட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edit by Prasanth,K