திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (18:10 IST)

சதாம் ஹூசைன் - ஜவஹர்லால் நேரு.. ராகுல் காந்தியை ஒப்பிட்ட அசாம் முதல்வர்!

rahul gandhi
சதாம் ஹூசைன் - ஜவஹர்லால் நேரு.. ராகுல் காந்தியை ஒப்பிட்ட அசாம் முதல்வர்!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சதாம் உசேன் போல் இருப்பார் என்றும் ஜவகர்லால் நேரு போல் இருப்பார் என்றும் அசாம் முதல்வர்  ஹிமந்த பிஸ்வா சர்மா ஒப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தோற்றம் தாடி வைத்தால் சதாம் உசேன் போல் இருப்பதாக அசாம் முதல்வர்  ஹிமந்த பிஸ்வா சர்மாகூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து அவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ராகுல் காந்தியின் தோற்றம் குறித்து நான் எதுவும் தவறாக சொல்லவில்லை என்றும் தாடியில் சதாம் உசேன் போலவே இருக்கிறார் என்றும் ஆனால் அதே நேரத்தில் தாடியை எடுத்தால் அவர் தனது தாத்தா ஜவகர்லால் நேரு போயிருப்பார் என்று கூறினேன் என்று தெரிவித்தார்
 
இந்த நிலையில் அசாம் முதல்வர்  ஹிமந்த பிஸ்வா சர்மாபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் போல் இருப்பதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பதிலடி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran