செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 நவம்பர் 2022 (15:38 IST)

மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த 10 சிறுவன்: அதன்பின் ஏற்பட்ட விபரீதம்!

porn
மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த பத்து வயதுசிறுவன் 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 8 வயது சிறுமியிடம் தனியாக இருந்த போது தகாத செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது
 
இதனையடுத்து சிறுமி அழுது கொண்டிருந்ததை பார்த்த அவரது பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் செய்த அத்துமீறல் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது
 
காவல்துறையினர் விசாரணை செய்த போது 10 வயது சிறுவன் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து சிறுமியுடன் அத்துமீறியதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனை அடுத்து அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
 
இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க சிறுவர் சிறுமிகளிடம் மொபைல் போனை கொடுக்கும்போது பேரண்டல் கன்ட்ரோல் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva