திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sinoj
Last Updated : சனி, 30 டிசம்பர் 2023 (21:29 IST)

2023 -ல் தமிழில் வெளியான டாப் 10 பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்

top 10 cinema blockbusters in 2023
ஆண்டுதோறும் எத்தனையோ படங்கள் வெளியாகின்றன. அதில் ரசிகர்கள் மற்றும், சினிமா விமர்சனங்களின் வரவேற்பை பெற்று, 2023 ஆண்டில் தமிழில் வெளியான டாப் 10 பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
jailer

 1.ஜெயிலர்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமர், மோகன்லால்,  தமன்னா ஆகியோர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ஜெயிலர். இப்படத்தை சன்பிக்சர்ஸ் சார்பில் கலா நிதிமாறன் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப் படமாகவும், பிளாக்பஸ்டர் படமாக அமைந்து, வசூலையும் வாரிக் குவித்தது.

தமிழ் சினிமாவின் இன்ஸ்டஸ்ட்ரி ஹிட் எனப்படும் ஜெயிலர் படம் ரூ.635 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பபடுகிறது.
 

vijay leo

2.லியோ.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன்,மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19ஆம் தேதி  உலகம் முழுவதும் ரிலீஸான படம் லியோ. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், முதல் நாளிலேயே இன்ஸ்டஸ்ரி ஹிட் என்பதற்கேற்ப வசூல் சாதனை படைத்தது. அதாவது உலகம் முழுவதும் லியோ படம் ரூ600 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
 

3.பொன்னியின் செல்வன்-2

கடந்த 2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் வெற்றிபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் தொடர்ச்சி பொன்னியின் செல்வன் 2 வது பாகம். பிரபல எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டது. இதில், விக்ரம் ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், பிரபு,சரத்குமார்,  பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இப்படம் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்றாலும் ரூ.350கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

Jawan

4.ஜவான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்,  நயன்தாரா, பிரியாமணி ஆகியோர் நடிப்பில்  அட்லீகுமார்  இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டரில் வெளியான படம் ஜவான். இப்படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி, பான் இந்தியா  படமாக வெளியாகி  உலகம் முழுவதும் ரூ.1148 கோடி வசூல் குவித்து பிளாக்பஸ்டர் படங்களில் இடம்பிடித்தது.


5.சலார்

தெலுங்கு சினிமாவின் ரிபெல் ஸ்டார் பிரபாஸ். இவர். பிரிதிவிராஜ், ஈஸ்வரி, ஸ்ருதிஹாசன் ஆகியோர்  நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில்,ஹம்பாலே  நிறுவனம் ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவான படம் சலர். இப்படம் கடந்த 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான  நாட்களில் ரூ.500 கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இவ்வாண்டில் கடைசியில் வெளியாகினும் ரசிகர்களின்  வரவேற்பை பெற்று வசூல் குவித்து பிளாக்பஸ்டரில் இடம்பிடித்துள்ளது சலார் படம்.
 
Mark antony

6.மார்க் ஆண்டனி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஷால். இவர் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா, சுனில்,. அபி நயா ஆகியோருடன் இணைந்து நடித்த படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகி, உலகம் முழுவதும் ரூ.100  கோடி வசூல் குவித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இது விஷாலின் கேரியலின் அதிக வசூல் குவித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

jigarthanda 2

7.ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர்  இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நவீன் சந்திரா, நிமிஷா சஜயன், இளவரசு, சீலா ராஜ்குமார், பவா செல்லத்துரை  உள்ளிட்டோர்  நடிப்பில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் வெளியானது முதல் ரசிகர்கள், சமூக ஆர்வலர் உள்ளிட்ட பலரது வரவேற்பை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 

chithha

8.சித்தா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சித்தார்த். இவர்  நிமிஷா சயாயனுடன் இணைந்து நடித்த, எசு.யு.அருண்குமார்  இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியான படம் சித்தா. இப்படத்தை சித்தார்த்தே தயாரித்திருந்தார். இப்படத்தில் சுந்தரி சிறார்  மீதான பாலுணர்வு நாட்டம் மற்றும் பலாத்காரத்தில் நாட்டமுள்ளவர்களால் கடத்தப்படும்போது, சித்தார்த் வாழ்க்கை மாறுகிறது. அவர் மீதே பழிவிழுகிறது. அடுத்து என்ன என்பதே கதை… ஈசுவரன் ஆக, சுந்தரியின் சித்தப்பாக சித்தார்த் நடிப்பில் கவனம் ஈர்த்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் எல்லோராலும் கொண்டாடப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
 
Por Thozil

9.போர்தொழில்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சரத்குமார். இளம் நடிகர் அசோக் செல்வன் மற்றும் நிகிலலா விமல், சரத்பாபு, நிழல்கள் ரவி, சுனில் சுகதா  ஆகியோர் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி வெளியானது. திரில்லிங் ஜர்னலில் அமைந்த இப்படம் நேர்மறையான  விமர்சனங்கள் பெற்று ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இப்படம் வெளியாகி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

10.மாமன்னன்
mamannan

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ்.இவர், பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை அடுத்து இயக்கியுள்ள படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத்  பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் ஜூன் 28 ஆம் தேதி ரிலீஸாகி ரசிககர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.52 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. இப்படம் சினிமா விமர்சகர்களின் வரவேற்பை பெற்று பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.