ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (07:19 IST)

ஒரே நாளில் இறங்கும் சிறு பட்ஜெட் படங்கள்… இந்த வாரம் ரிலீஸாகும் 11 தமிழ்ப் படங்கள்!

2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் தமிழ் சினிமாவில் 11 சிறுபட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிக படங்கள் ரிலீஸ் ஆவது இதுவே முதல்முறையாகும். இதில் நந்தி வர்மன், வட்டார வழக்கு, மதிமாறன், டிக்டாக், மூத்த குடி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜெய் விஜயம், ரூட் நம்பர் 17, பேய்க்கு கல்யாணம், சரக்கு மற்றும் மூன்றாம் மனிதன் ஆகிய 11 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆனாலும் சரக்கு, வட்டார வழக்கு, டிக்டாக் மற்றும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட படங்களை தவிர பிற படங்களுக்கு எந்தவொரு ப்ரமோஷனும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.