ரஜினி அரசியலுக்கு வராததால் வருத்தப்பட்டேன்-லதா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர், சினிமாவில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக உள்ளார். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து, த.செ.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் களமிறங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், அவரது உடல்நல பாதிப்பால் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார்.
இது அவரது ரசிகர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் சினிமா துறையினருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில், ரஜினி தற்போது அரசியல் பற்றி பேச்சு எடுப்பதில்லை. சினிமாவில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென விரும்பினேன் என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென்று விரும்பினேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததால் மிகவும் வருத்தப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.