செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (10:57 IST)

விஜய்சேதுபதில்லாம் ஆளே இல்லைங்க.. சூப்பர் டீலக்ஸ் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் என்ன?

சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
 
ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் அடுத்த படைப்பாக வெளியாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் ஏப்பொழுது வெளியாகும் என காத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள்.
 
விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி, ஆபாச நடிகையாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
இப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
 
படம் பக்கா மாஸ். சொல்ல வார்த்தையே இல்லை. தியாகராஜன் குமாரராஜா நல்ல படைப்பை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த டைரக்டர். விஜய் சேதுபதி இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை. மிகச்சிறந்த நடிகரவர். திருநங்கைகள் படும் அவலத்தை விஜய்சேதுபதி கண்முன் நிறுத்தியுள்ளார். பிஜிஎம் செம பாஸ், யுவன் சங்கர் ராஜா பின்னியிருக்கிறார்.
 
சமந்தா சான்சே இல்லை. அவரது நடிப்பு மிகச்சிறப்பு. பகத்பாசில் கச்சிதமாக நடித்திருக்கிறார். படத்தில் மொத்தம் 4 ஜார்னர். எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரம்யாகிருஷ்ணன் வழக்கம்போல் அல்டிமேட்டாக நடித்துள்ளார். மிஷ்கினின் நடிப்பும் பிரமாதம். 
 
இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக படத்தில் நடித்துள்ள சிறுவர்களின் நடிப்பு மிகப்பிரமாதம், அனைவரும் பார்க்கவேண்டிய படம் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறுகின்றனர்.