திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (12:24 IST)

நயன்தாரா மட்டும் போதுமா? கதை எங்கே? ஐரா ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்...

நயன்தாராவின் ஐரா திரைப்படம் ஒரு சிலரிடையே நல்ல வரவேற்பை பெற்றபோதிலும் பெரும்பாலான ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
 
சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர் உள்ள படத்தையே தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா  ‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் 'ஐரா' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா யமுனா, பவானி என  இரண்டு வேடங்களில் முதன்முறையாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஐரா படத்திற்கு1000 பதாகைகள், 700 பஸ், 500 ஆட்டோ, 8 வேன், பெரிய மாலில் எல்.இ.டி விளக்குகள் , டிஜிட்டலில் விளக்கு என்று பட்டயகிளப்பும் வகையில் படக்குழுவினர் புரோமோஷன் செய்தனர்.
 
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம்  இன்று தியேட்டர்களில் வெளியானது.
 
நயன்தாராவின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தனர். படத்தை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் அவர்களின் கருத்தை கூறியுள்ளனர். முதல் 40 நிமிடங்கள் மட்டுமே பார்க்கும்படியாக இருக்கிறது, லாஜிக் இல்லாமல் படம் எடுத்துள்ளனர்.
 
நபர் ஒருவர் படம் செம போராக இருந்ததால் தூங்கிவிட்டேன் என கூறியிருக்கிறார். நயன்தாராவுக்காக பார்க்கலாமே தவிர கதையில் ஒன்றும் இல்லை, பேய் படமெல்லாம் ஒன்னுமில்லை. ஸ்க்ரீன்பிளே மொக்கை, பிஜிஎம் செம மொக்கை, யோகிபாபுவின் காமெடி சொல்லும் அளவிற்கு இல்லை என கூறியுள்ளனர்.
 
நயன்தாராவின் ரசிகர்கள் பேசுகையில் படம் நன்றாக இருக்கிறது ஆனால் இப்படியெல்லாம் படத்தை எடுத்து நயன்தாராவின் பெயரை கெடுக்காதீர்கள் என ஆதங்கப்படுகின்றனர்.  நயன்தாராவுக்காக எந்த படமும் ஓடாது. நல்ல கதை இருந்தால் மட்டுமே படம் வெற்றி பெரும் எனவும் கூறியுள்ளனர்.