புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:29 IST)

இனிமேல் இப்படி நடக்க விடக்கூடாது - நடிகர் விஷால்

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் ( 2 வயது). கடந்த 25 ஆம் தேதி, வீட்டில் அருகே இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். இதற்கு தமிழக அரசு அத்துணை பெரிய தீவிர முயற்சிகள் எடுத்தும் முயற்சி பலனளிக்காமல் இன்று அதிகாலை 2:  30 மணி அளவில் சுஜித் உயிரிழந்தான். இதற்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சுர்ஜித் குடும்பத்திற்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால், ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து  இறந்த சுர்ஜித் மரணத்திற்கு பிறகு , இனி இதுபோல் நடக்க விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
 
தனது டுவிட்டர் பக்கத்தில் விஷால் பதிவிட்டுள்ளதாவது :
 
அப்பாவி குழந்தை இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்துளை கிணறுகளை மூடாம இருப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.