தொடர்புடைய செய்திகள்
- அந்த பாப்பா யாரு? தளபதி 67 படத்தில் பிரபல நடிகரின் மகள் !
- விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்துக்கு ரஷ்யாவில் கிடைத்த அங்கிகாரம்!
- தளபதி 67 பட ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- விஜய் சேதுபதிக்கு கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்… பின்னணி என்ன?
- விஜய்யை சந்தித்த நடிகர் சந்தீப் கிஷன்… தளபதி 67 ல் இருக்கிறாரா?
’தளபதி 67’ படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி, நேரம் அறிவிப்பு..!
தளபதி 67 படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி, நேரம் அறிவிப்பு..!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு தளபதி 67 படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை அறிய விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன்,அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ள நடித்து வருகின்றனர்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
