விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்துக்கு ரஷ்யாவில் கிடைத்த அங்கிகாரம்!
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ரிலீஸுக்குப் பிறகு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ரஷ்ய நாட்டி திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளது.
இது சம்மந்தமாக இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ள ட்வீட்டில் “பகிர்வதில் மகிழ்ச்சி. ஏப்ரல் 20 முதல் 27 வரை நடக்கும் 45-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில், உலக சினிமா பிரிவில் மாமனிதன் திரைப்படத்தை ரஷ்ய அரசாங்கம் திரையிடுகிறது. இதையடுத்து MIFF மதிப்புமிக்க திரைப்பட விழாக் குழு, மாமனிதன் திரைப்பட தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் எனக்கும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.” எனக் கூறியுள்ளார்.