திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (17:08 IST)

அந்த பாப்பா யாரு? தளபதி 67 படத்தில் பிரபல நடிகரின் மகள் !

தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. 
 
இதில் திரிஷா, பிரியா ஆனந்த் , அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த விழாவில் ஒரு சிறுமி இடம் பெற்றிருந்தது பேசுபொருளாக அமைந்தது. 
 
யார் அது என ரசிகர்கள் ஆராய்ந்து பார்த்ததில், அவர் பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் 'இயல்' என்பது தெரியவந்தது. இயல் தன் அப்பாவுடன் சேர்ந்து நிறைய டிக் டாக் வீடியோக்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.