2வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. மீண்டும் உச்சம் செல்வதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (11:11 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் தற்போது 135 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 985 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 21,701 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளில் உயர்ந்துள்ளதை அடுத்த வாரமும் உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்  

ஆனால் அதே நேரத்தில் புதிதாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள்  தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


Edited by Siva

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments