1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty

பங்குச்சந்தையில் இன்று சிறிய இறக்கம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்க நிலையிலே வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சிறிய அளவில் சரிவைக் கண்டுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் 55 புள்ளிகள் குறைந்து, 82,935 புள்ளிகளுக்கு சரிந்துள்ளது. அதே நேரத்தில், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 25,372 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
பங்குச்சந்தையின் இச்சரிவை பயன்படுத்தி புதிய பங்குகளை வாங்கலாம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி போன்ற பங்குகள் உயர்வு கண்டுள்ளன. இதற்கு மாறாக, ஆசியன் பெயிண்ட், எச்.டி.எப்.சி வங்கி, ஐடிசி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இன்று மிலாடி நபி விடுமுறை நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!